search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் ஒப்பந்தம்"

    • பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, மனு தாக்கல் செய்தார்.
    • பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுைவ சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஆர்டரை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக பிரான்சில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    ரபேல் ஒப்பந்தத்தை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஏற்றுக்கொண்டது நகைச்சுவை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Rafale #CAG #Joke #Chidambaram
    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறியிருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அதனை ஏற்றுக்கொண்டது ஒரு நகைச்சுவையாக ஆகிவிட்டது. வருங்காலத்தில் அமையும் அரசு அந்த அமைப்பின் பெருமையையும், ஸ்திரத்தன்மையையும் மீட்கும். ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகள், விலை நிர்ணயம், ஒப்படைத்தல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து அந்த 33 பக்க அறிக்கை விளக்கும் என்றும், அதில் சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படைத்தன்மை ஆகியவை பற்றி கருத்து வெளியிடும் என்றும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.

    இதுவே இறுதியானது என்று சொல்வதற்கு தலைமை கணக்கு தணிக்கையர் ஒன்றும் கடவுள் அல்ல.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #Rafale #CAG #Joke #Chidambaram

    முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை விட, பாஜக ஆட்சியில் குறைந்த விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம்  உள்ளிட்ட விமானப்படையின் பிற கொள்முதல் குறித்த தகவல்கள் அடங்கிய சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்புத்துறை தொடர்புடைய 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மோடியின் படத்துடன் கூடிய காகித விமானங்களை கையில் வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், சமாஜ்வாடி உறுப்பினர்கள், உ.பி. பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் நான் எழுப்பும் கேள்விகளை பிரதமர் மற்றும் மந்திரிகளிடம் ஒவ்வொருவரும் கேளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். #rahulgandhi #pmmodi #bjp
    ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் என குற்றம் சாட்டும் காங்கிரஸ் இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாகவும், ரபேல் ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியிலும் மத்திய அரசு இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

    இதுதொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது காரசாரமான வாக்குவாதம் நடந்தது. கமி‌ஷன் பணம் கிடைக்காததால்தான் ‘ரபேல்’ விமான பேரத்தை காங்கிரஸ் கைவிட்டது, பொதுத்துறை நிறுவனத்துக்காக அது முதலை கண்ணீர் வடிக்கிறது என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.  இருப்பினும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்,  “ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி 2 மணி நேரம் பேசினார். ஆனால் நான் கேட்ட 2 சாதாரண கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    தன்னுடைய இரு கேள்விகள் அடங்கிய வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.  ரபேல் விவகாரத்தில் இந்திய பங்குதாரர் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடுத்தது யார்? ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தபோது ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் அதிருப்தி தெரிவித்தனரா? ஆகிய கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என பதிலளிக்குமாறு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கேள்விகளை பிரதமர் மற்றும் மந்திரிகளிடம் ஒவ்வொருவரும் கேளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  #rahulgandhi #pmmodi #bjp
    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    புதுடெல்லி:

    மத்திய அரசு செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட போது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் விருப்ப ஓய்வு பெற்றார்.

    அவர் பண மதிப்பு நீக்கம் குறித்து கூறுகையில், “இந்த நடவடிக்கை மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சரிவடைந்தது” என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

    பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்காத அரவிந்த் சுப்பிரமணியன் ஏன் அப்போது பதவி விலகவில்லை.

    ஆனால் முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து ராஜினாமா செய்தார்.

     


    ரபேல் ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம். மனோகர் பாரிக்கர் அதில் இருந்து விலகி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

    அரவிந்த் சுப்பிரமணியனும் இப்போது கருத்து தெரிவித்து அதில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள். இதுபற்றி விசாரண நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய நிறுவனங்கள் எவை? என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். #NirmalaSitharaman #Rafaledeal
    மும்பை:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் (ஆப்செட் பார்ட்னர்) நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதிலும் ஊழல் நடந்திருப்பதாக போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.

    இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய பங்குதாரர் நிறுவனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ரபேல் விமானம் வினியோகத்தில் டசால்ட் நிறுவனமும், 2 அல்லது 3 இந்திய நிறுவனங்களும் பங்கேற்கின்றன. முதலீடு சார்ந்தோ, உதிரி பாகங்களை வாங்கவோ அல்லது சேவைக்காகவோ எத்தனை எண்ணிக்கையிலும் இந்திய பங்குதாரர் நிறுவனங்களை இணைத்துக் கொள்வது டசால்ட்டின் விருப்பத்தை சார்ந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு உள்ள இந்திய பங்குதாரர் நிறுவனங்களிடம் இருந்து எந்த வகையான (முதலீடு, உதிரிபாகங்கள்) சேவையை பெற்றுக்கொண்டோம் என, ரசீதுடன் என்னை அணுகும்போதுதான் அந்தந்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும். அதுவரை ரபேல் ஒப்பந்தத்தில் எத்தனை இந்திய பங்குதாரர் நிறுவனங்களுடன் டசால்ட் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்ற விவரங்களை என்னால் கூற முடியாது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman #Rafaledeal


    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். #FafaleDeal #YashwantSinha #ArunShourie #PrashantBhushan
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரிகளான யஸ்வந்த் சின்கா, அருண் சோரி ஆகியோர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி புகார் செய்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் குற்ற முறைகேடு நடந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.



    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தங்கள் புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரித்து அது குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
    ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கவுள்ளது. #FafaleDeal #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    இதைத்தொடர்ந்து ரபேல் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரிக்கப்படும் நிலையில், வினீத் தண்டா என்ற வக்கீல் புதிதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.



    அவர் தனது மனுவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் மற்றும் இந்த விமானங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் தற்போது வாங்கும் விலைக்கு இடையிலான ஒப்பீடு போன்றவற்றை வெளியிட மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    மேலும் இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், இதன் மீது 10-ந்தேதி (நாளை) விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர். #FafaleDeal #SupremeCourt
    ரபேல் போர் விமாங்கள் கேம் சேஞ்சராக திகழும், ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa
    புதுடெல்லி :

    பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது.

    இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

    இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை, ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

    அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வார்த்தைப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் ஒரு கேம் சேஞ்சர் என இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பிரான்சிடம் வாங்கும் ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷியாவிடம் இருந்து வாங்கவுள்ள எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இவை இரண்டும் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரித்து கேம் சேஞ்சராக திகழும்.

    36 ரபேல் விமானங்களை வாங்க அரசு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுகோய் 30 விமானத்தை தர 3 ஆண்டும், ஜாகுவார் விமானத்தை தர 5 ஆண்டும் தாமதம் செய்தது. எனவே அதற்கு பதிலாக ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa 
    ரபேல் ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ் தான் என்றும், காங்கிரஸ் ஆட்சியிலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #RafaleDeal #NirmalaSitharaman
    சென்னை:

    சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரண்டாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-

    2016ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் 4 முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ்தான். ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியிலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.



    சபரிமலை தீர்ப்பில் தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது, ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம்.

    இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் தமிழக மீனவர்களுக்கு எப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பாதுகாப்பு  வழங்குகிறது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு மட்டுமே ராணுவ ஹெலிகாப்டரை வழங்கவில்லை, அவசர உதவி என யார் கேட்டாலும் உதவி வழங்கி வருகிறோம். சமீபத்தில் கூட மேற்குவங்கத்தில் உயிரிழந்த காங்கிரஸ் தலைவரின் உடலை கொண்டு செல்ல ராணுவ விமானத்தை வழங்கினோம். தற்போதுகூட இமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #RafaleDeal #NirmalaSitharaman
    ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்புபவர்களையும், எதிர்ப்பவர்களையும் மோடி அரசு குறிவைத்து நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவது குறித்து மோடி அரசு பிரான்ஸ் நாட்டுடன் போட்டுக்கொண்ட ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அந்த குற்றச்சாட்டு வலுசேர்க்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை இணைத்தது இந்திய அரசின் வற்புறுத்தலினால்தான் என தெரிவித்ததாக வெளியான செய்தி அமைந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.



    இந்த விவகாரத்தில் தொடர்ந்து மோடி அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஒரு மாத விடுமுறை அழித்துவிட்டு, ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரமாக ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அரசை எதிர்ப்பவர்கள் குறிவைத்து நீக்கப்படுவதும், ஆதரிப்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
    ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். #RafaleRow #NirmalaSitharaman #AAP
    புதுடெல்லி:

    ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.



    அதில், “இந்த ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகளால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். டசால்ட் ஏவியேசன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர் விமானங்களை தயாரிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை 3 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், கோர்ட்டை அணுகுவோம்‘” என்று அவர் கூறியுள்ளார்.  #RafaleRow #NirmalaSitharaman #AAP
    ×